மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து மீண்டும் முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 4 ஆவது முறையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு வலையமைப்பு ஆய்வுசெய்து பட்டியலிடுகின்றது.

இதில் 149 நாடுகள் கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. இம்முறை 146 நாடுகள் இதில் இடம்பெற்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான சுகாதார வாழ்க்கை, சொந்த வாழ்வை முடிவு செய்யும் சுதந்திரம், மொத்த மக்கள் தொகை மற்றும் ஊழல் அளவு ஆகியவை இதில் அளவுகோல்களாக கொள்ளப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

இதில் 55.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட பின்லாந்து 7.842 புள்ளிகளுடன் தொடர்ந்து 4 ஆவது ஆண்டாகவும் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் அமெரிக்க 16ஆவது இடத்திலும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை 15ஆவது மற்றும் 20ஆவது இடத்திலும் உள்ளன.
மத்திய கிழக்கு நாடான லெபனான், தென்னமெரிக்க நாடான வெனிசுலா, ஆப்கானிஸ்தான் ஆகியவை கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.

அதேபோன்று இந்தியா 136ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 103ஆவது இடத்திலும் இலங்கை 126ஆவது இடத்திலும் உள்ளன.

அத்துடன் ஜிம்பாப்வே, ருவாண்டா, போட்ஸ்வானா, மற்றும் லெசோதோ ஆகியவை கடைசி 5 நாடுகள் வரிசையில் உள்ளன.

Leave a Reply