பிலியந்தலை எரிவாயு விற்பனை நிலையத்தில் முறுகல்

கொழும்பு பிலியந்தலை பட்டுவந்தர பிரதேசத்தில், எரிவாயு விற்பனை நிலையமொன்றில் நேற்று (20) காலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

போதியளவிலான எரிவாயு விற்பனைக்கு இல்லாததால், எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக வந்த மக்கள் எரிவாயு விற்பனை நிலையத்தின் உரிமையாளருடன் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விற்பனை நிலையத்துக்கு முன்பாக லாப் எரிவாயுவை பெற்றுக்கொள்தற்காக காலை முதல் நூற்றுக்கணக்கானோர் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.

எனினும் குறிப்பிட்டளவே எரிவாயுவே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனால் எரிவாயுவை பெற்றக்கொள்ள முடியாத மக்கள் உரிமையாளருடன் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.

லாப் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் எரிவாயு சிலிண்டர் 4,199 ரூபாய்க்கும்; ஐந்து கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் 1,680 ரூபாய்க்கும் இதன்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply