தண்ணீர் கானுக்குள் வீழ்ந்த இரட்டை குழந்தையில் ஒன்று பலி!

புதுக்குடியிருப்பில் மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கானில் தவறி வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்தது.

புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியனை சேர்ந்த சியோன்ஷன் என்ற சிறுவனே (ஒருவருடமும் மூன்று மாதமுமான குழந்தையே) இவ்வாறு உயிரிழந்தான்.

இரட்டைக் குழந்தைகளாக பிறந்து வளர்ந்து வந்த நிலையில் ஆண் குழந்தை இவ்வாறு உயிரிழந்தது.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மலசல கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த வெட்டிய தண்ணீர்கானில் விழுந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

குழந்தையின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி ரி.சரவணராஜா சம்பவ இடத்திற்கு வருகைதந்து, பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குழந்தையின் உடலம் மரண விசாரணைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply