வட்டுவாகலில் தடம்புரண்டது பேருந்து

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் தடம்புரண்டு நேற்று மாலை விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 22 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோதே 40 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த குறித்த தனியார் பேருந்து தடம் புரண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான விவரங்கள் நேற்று இரவு வரையில் வெளியாகவில்லை.

Leave a Reply