பெப்ரவரி மாதம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளாத தமிழ் தலைவர்கள் !!

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஒருமுறை கூட கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மாதத்தில் ஒருமுறை கூட கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அடங்குகின்றனர்.

மேலும் அமைச்சர் திலும் அமுனுகம, காமினி லொக்குகே ஆகியோரும் குமார வெல்கம ரொஷான் ரணசிங்க, ஜயந்த வீரசிங்க, திரான அலஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட குறித்த பிரதிநிதிகள் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளாதமை தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply