ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு

<!–

ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு – Athavan News

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 272 ரூபாயாகவும் விற்பனை விலை 282 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 359 ரூபாயாகவும் விற்பனை விலை 372 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

அவுஸ்ரேலிய டொலரின் விற்பனை விலை 210 ரூபாயாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 225 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.


Leave a Reply