அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் காலமானார்

வாஷிங்டன், மார்ச் 24

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 84.

இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் மேடலின் ஆல்பிரைட்டின் டுவிட்டர் பக்கத்தில், ‘அமெரிக்காவின் 64 வது வெளியுறவுச் செயலரும் அந்த பதவி வகித்த முதல் பெண்ணுமான மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். அவர் குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டுள்ளார்.

நாங்கள் ஒரு அன்பான தாய், பாட்டி, சகோதரி, அத்தை மற்றும் நண்பரை இழந்துவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளனர். 2012-ம் ஆண்டில், ஜனாதிபதி பராக் ஒபாமா ஆல்பிரைட்டுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான சுதந்திரப் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply