
வடக்கில் மூன்று இடங்களில் தென்பகுதி மீனவர்களுக்கு மீன்பிடித் துறைமுகம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற பேராசிரியர் எ.எஸ் சூசை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் :
தமிழ் அமைச்சரைக் வைத்தே ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற தென்பகுதி மீனவர்களுக்கான துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன.
மயிலிட்டித் துறைமுகத்துக்கு நடந்த கதியே, அமையவுள்ள துறைமுகங்களுக்கும் ஏற்படும்..அரசின் காரியம் முடிந்ததும் அமைச்சருக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவி காத்திருக்கும்.
வடக்கில் மீன்பிடி துறையின் விருத்திக்கு உதவுவதுபோல உலகத்தை ஏமாற்றி துறைமுகம் என்ற போர்வையில் தென்பகுதி மீனவர்களுக்கான அபிவிருத்தியையே கடல்தொழில் அமைச்சு செய்து வருகிறது.
இந்த விடயம் இப்போது தெரிய வராது.துறைமுகம் அமைந்த பின்னரேயே அது தெரியவரும்.
அமைச்சர் முடிந்தால் தமிழர் பாரம்பரிய மீன்பிடி கிராமங்களான கொக்கிளாய்,நாயாறு ,தென்னைமரவாடியை சிங்கள மீனவர்ளிடமிருந்து மீட்டுக் காட்டட்டும்.
வலி வடக்கில் பறிபோன மீன்பிடி கிராமங்களை மீட்டுக் காட்டட்டும்.மன்னாரில் பறிபோன முள்ளிக்குளம் மீனவ கிராமத்தை மீட்டுத் தரட்டும். முடியுமா அவரால்.
சொந்த இடம் திரும்ப முடியாது அவதியுறும் மீனவர்களை சொந்த இடம் திரும்பி ஆவன செய்வதுதான் அமைச்சரின் முதல் பணி.அப்புறமே அபிவிருத்தி .என்பதை அமைச்சர் புரிந்து கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.





