இலங்கைக்கு 2000 மெட்ரிக் டன் அரிசியை அன்பளிக்க சீனா தீர்மானம்

இலங்கைக்கு தேவையான அரிசியை அன்பளிப்பு செய்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடினமான பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை மக்களுக்கு 2,000 மெட்ரிக் டன் அரிசியை அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீன தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply