தென்னிலங்கை மக்களும் பிரபாகரனையே இப்போது தேடுகின்றார்கள் – இதை தற்போதுள்ள தலைவர்கள் உணர்ந்து கெகாள்ள வேண்டும்! – அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற நாமத்தையே தென்னிலங்கையில் இருக்கக்கூடிய மக்களும் உச்சரிக்கிறார்கள் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தனோ, சுமந்திரனோ, கஜேந்திரனோ, விக்னேஸ்வரனோ தான் வந்து எங்களை காப்பார்கள் என்று அவர்கள் சொல்லவில்லை.

அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற நாமத்தை தான் உச்சரிக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் பிரபாகரன் என்ற ஒருவரால் தான் அது முடியும் என நம்புகிறார்கள். இதை இன்று இருக்கக்கூடிய தலைவர்கள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply