
இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய காரியங்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வட பிராந்திய அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் போட்டிகள் நடைபெற்றன.
13 பிராந்தியங்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வடபிராந்திய அணியினர் “ரஜரட்டை” பிராந்திய அணியை இறுதிப் போட்டியில் சந்தித்து இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.





