ரூ.17 லட்சம் பெறுதியான மருந்துகளை திருடியவர் கைது

கொட்டாவ, மார்ச்28

வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரரொருவர் கொட்டாவ – மஹல்வராவ பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் ரூ. 17 லட்சம் பெறுமதியான மருந்துப்பொருட்கள், பணம் ஆகியவற்றை திருடிய சம்பவத்துக்காக கொட்டாவ பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

இவர், தனியார் மருந்தகத்தில் இருந்து அதிக விலையுடைய விட்டமின் வில்லைகள், தைலங்கள் உள்ளிட்ட சிலவகை மருந்து பொருட்களை திருடியுள்ள நிலையில், இவரிடமிருந்து ரூ. 274,000 பணமும், ரூ.350,000 பெறுமதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த நபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply