இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம்

கொழும்பு, மார்ச் 28

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக அதிகப்படியான டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் கடந்த 3 மாத காலப்பகுதியளவில் இதுவரையில்லாத நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான முழுமையான அறிக்கை வருமாறு,

இதுவரை காலப்பகுதியில் 7,947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் 5,397 பேராக பதிவாகியுள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில் 1,826 நோயாளர்களும் மார்ச் மாதத்தில் 725 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கமைய 1,433 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, கம்பஹா மாவட்டத்தில் 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் குருநாகலில் 761 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 538 நோயாளர்களும், களுத்துறையில் 499 நோயாளர்களும் மற்றும் காலி மாவட்டத்தில் 456 பேர் டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply