
சென்ட் , அல்லது பாடி ஸ்பிரே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதன் மணங்கள் வெவ்வேறு வகையில் அமைந்திருக்கும்.
நூறு ரூபா முதல் பல ஆயிரம் ரூபா வரையிலான சென்ட்கள் எல்லாம் சந்தையில் இப்போது கிடைக்கிறது.
இவற்றின் மணம், தரத்துக்கு ஏற்ப விலைகள் மாறுபடும்.மணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபட்ட விருப்பை கொண்டிருக்கும்.
இந்த நிலையில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் வாசனைகளில் இப்போது சென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் வாசம் பிடிக்கும் என்ற காரணத்தால் இந்த சென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
“Mach-Eau GT என்ற தயாரிப்புகள் இப்போது பெற்றோல் வாசனையில் வந்துள்ளது.
இந்த சென்ட் போத்தலுடன் உருவ அமைப்பு எரிபொருள் நிரப்புவதற்கு பயன்படும் மீற்றர் தங்கி போலவே அமைக்கப்பட்டுள்ளது.





