
கொழும்பு, மார்ச் 30
இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 15 ஆயிரம் அதிகரித்து ரூ.2 லட்சம் என வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நெகிழ்வான நிலைக்கு விடப்பட்டதால் டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து ரூ.83 ஆயிரத்து 500 அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை ஒரு ரூ. லட்சத்து 69 ஆயிரத்து 500 காணப்பட்டது. அதேவேளை, 24 கரட் தூய தங்கம் செவ்வாய்க்கிழமை பவுண் ஒன்று ரூ.2 லட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. திங்கட்கிமை 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ரூ. ஒரு இலட்சத்து 85 ஆயிரமாக காணப்பட்டது.





