பங்களாதேஸுக்கு, இலங்கை கிரிக்கெட் அணி பயணம்

கொழும்பு, மார்ச் 31

பங்களாதேஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் ஒரு கட்டமாக இந்த தொடர் இடம்பெறவுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மே மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் சட்டோக்ராமில் நடைபெறவுள்ளமையால் மே மாதம் 8ஆம் திகதி இலங்கை அணி பங்களாதேஸுக்கு பயணிக்கிறது.

இரண்டாம் போட்டி டாக்காவில் மே 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டிகளுக்கு முன்னதாக 11,12ஆம் திகதிகளில் இரண்டு அணிகளும் பயிற்சி போட்டியொன்றில் விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply