
நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஆட்சியாளர்களால் குழப்படலாம். எனவே, நன்கு திட்டமிட்டு அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கவும். விழிப்பாக செயற்படுமாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அநுரகுமார கூறியதாவது,
மக்களின் கோபம் நியாயமானது, தாம் துன்பப்படும்போது எதிர்ப்பை வெளியிடும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது. எனினும், அவ்வாறான நடவடிக்கையின்போது அவதானமாக இருக்க வேண்டும்.
சிலவேளை, போராட்டங்களை வன்முறையாக மாற்றி தனக்கு தேவையானதை அரசு நிறைவேற்றிக்கொள்ளலாம். அமைதியான போராட்டங்களுக்குள் தமது குழுவை அனுப்பி தனக்கு தேவையானவற்றை செய்வதற்கு அரச தரப்பு முற்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, நன்கு திட்டமிட்ட அடிப்படையிலும், அமைதியாகவும் போராடுமாறு அறிவுறுத்துகின்றோம் என்றார்.





