
நாடு முழுவதும் நாளை 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் சுழற்சிமுறை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாட்டில் நாளை தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை நடைமுறைப்படுத்த மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், குறித்த இக் கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.
இதன்படி, நாளை 5 மணித்தியால மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது மின்வெட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, a முதல் w வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் சுழற்சிமுறை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.





