அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்: நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு

கொழும்பு, ஏப் 03

அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply