தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்ட பெண்! சந்தேக நபர் தப்பியோட்டம்

அக்மீமன – நியகம காலனி பகுதியில் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அக்மீமன நியகம பகுதியில் வசிக்கும் 58 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply