அமைச்சரவை இராஜினாமா செய்ததாக நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக இன்றும் (04) நாடளாவிய ரீதியில் போராட்டம் தொடருகிறது.
இன்று காலை பத்தரமுல்லை தியத்த உயனவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரபல தொலைக்காட்சியான ‘கும்பியோ’வின் இயக்குனர் லக்மால் தர்மரத்ன மற்றும் அதன் முன்னணி நடிகர் துமிது தொடந்தென்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சேவியர் கனிஷ்க, மனோஜா பெர்னாண்டோ உட்பட பெருந்திரளான கலைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.






