யாழ்.பாசையூர் வீடொன்றில் தீ விபத்து

யாழ்ப்பாணம், ஏப் 5

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பன எரிந்து நாசமாகி உள்ளன.

Leave a Reply