ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் – ஹரீன் பெர்னாண்டோ கடிதம்

<!–

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் – ஹரீன் பெர்னாண்டோ கடிதம் – Athavan News

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என்றும் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply