<!–
புதிதாகப் பரவிவரும் XE வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போதே, நாட்டில் பரவும் XE வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கொரோனோ வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






