காலிமுகத்திடலால் செல்லும் வாகனங்களிளும் கோத்தா கீதம்.(வீடியோ இணைப்பு)

அரசிற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் கடந்த 03 தினங்களாக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பல்லாயிரக் கணக்கான மக்கள் இணைந்து இரவு பகலாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதுடன் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் ஏனைய தேவைகளையும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களாலும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது…

இந்நிலையில் காலிமுகத்திடல் வீதி வழியாக பயணிக்கும் வாகனங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ‘கோ ஹோம் கோட்டா’ மற்றும் கபுட கா கா என்றவாறு ஒலியெழுப்பியவாறு பயணித்து கொண்டிருக்கின்றது.

அரசுக்கு எதிராக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் அரசை விரட்டியடிக்கும் வரை தொடரவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply