மருந்து கொள்வனவு – 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி

<!–

மருந்து கொள்வனவு – 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி – Athavan News

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவசரகால மருந்துகள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் உலக வங்கி மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் அமைச்சர் கூறியள்ளார்.


Leave a Reply