
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து மீண்டும் விலக தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கூட்டணியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்த பின்னர் சியம்பலாப்பிட்டிய, பிரதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை அடுத்து மீண்டும் அந்த பதவியை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை ஜனாதிபதி ராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளதை அடுத்து, பிரதி சபாநாயகர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்ய அவர் தீர்மானித்துள்ளார்.





