‘வடக்கில் கைப்பற்றிய நிலங்களை மக்களுக்கு வழங்கி விட்டு வீட்டுக்கு போ கோட்டா!’ – காலிமுகத்திடலில் ஒலித்த குரல்

கொழும்பு – காலி முகத்திடலில் இளைஞர்கள், மக்கள் இணைந்து இன்று ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், “வடக்கில் கைப்பற்றிய நிலங்களை மக்களுக்கு வழங்கி விட்டு வீட்டுக்கு போ கோட்டா” என எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டத்தில் இலங்கை மக்கள் இன, மத வேறுபாடு இன்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply