தமிழ் மக்களுக்காக காலியில் உயர்த்தப்பட்ட கை

கொழும்பு, ஏப் 15

காலி முகத்திடலில் இளைஞர்கள், மக்கள் இணைந்து வெள்ளிக்கிழமை ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வடக்கில் கைப்பற்றிய நிலங்களை மக்களுக்கு வழங்கி விட்டு வீட்டுக்கு போ கோட்டா என எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனூடாக இலங்கை மக்கள் இன, மத வேறுபாடு இன்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply