எரிபொருளுக்கு இனி வரையறை!

எரிபொருள் மீள்நிரப்பு தொடர்பில் சில வரையறைகளை அரசாங்கம் விதித்துள்ளது. இந்த மீள்நிரப்பு நடவடிக்கைகள் நேற்று நண்பகல் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வரைமுறைகளின்படி மோட்டார் சைக்கிள்களுக்கு ஒரே தடவையில் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாவுக்கே பெற்றோல் நிரப்ப முடியும், முச்சக்கர வண்டிகளுக்கு ஆயிரத்து 500 ரூபா வரையும், கார் மற்றும் வான்களுக்கு 5 ஆயிரம் ரூபா வரையுமே ஒரே நேரத்தில் எரிபொருள் மீள்நிரப்ப முடியும்.

எனினும், பேருந்துகள், ஜீப்கள், வர்த்தக வாகனங்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்பனவற்றுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply