ருவிட்டரை வாங்குவதை விட இலங்கையை வாங்குங்கள்!

ருவிட்டரை வாங்குவதற்கு முனைந்த உலகின் முதல்தரப் பணக்காரரான எலான் மாஸ்க்குக்கு, இலங்கைத் தீவை வாங்கி ‘சிலோன் மாஸ்க்’ என்று பெயரைச் சூட்டுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார், இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்னப்டீல் தலைமை அதிகாரி குனால்.

பிரபல சமூகவலைத்தள நிறுவனமான ருவிட்டரை வாங்கத் தயார் என்று எலான் மாஸ்க் கூறியிருந்தார். அதன் மதிப்பு 43 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

இலங்கையின் மொத்தக் கடன் மதிப்பு 45 பில்லியன் அமெரிக்க டொலராகும். இவ்வாறானதொரு நிலையிலேயே இந்திய அதிகாரி, எலான் மாஸ்க்குக்கு ருவிட்டரில் மேற்படி அறிவுரையை வழங்கியுள்ளார்.

Leave a Reply