வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அலி சப்ரி!

<!–

வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அலி சப்ரி! – Athavan News

தற்போதைய வரி வருமானம் போதுமானதாக இல்லாததால் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புடன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply