மானிப்பாயில் கொழுந்து விட்டெரிந்த கோட்டாவின் உருவ பொம்மை 

வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற போராட்டத்தில், குறித்த பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உருவப்பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் பங்கெடுத்த சபை உறுப்பினர் ஒருவர் சமூகம் மீடியாவிற்கு கருத்து தெரிவிக்கையில் ,

அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்வாதிகளின் ஊழல் செயற்பாடுகளால் தான் நாடு இந்த மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்களிடம் பணம் இருந்தும் வாழ முடியாத மிக மோசமான நிலைக்குட்பட்டிருக்கிறது.

இந்த பிரதேச சபையில் இடம்பெற்ற ஊழல்களுக்கே இதுவரைகாலமும் தீர்வு காண முடியாமால் உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply