முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நஸீர் அஹமட் நீக்கம்!

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து பொறுப்புக்கள் மற்றும் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக செயற்பட்டு வந்த நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்று கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

அத்துடன், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஏனைய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply