ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் விளைவினை அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்துவதாகசமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் உருவாக்கிய நாடகம் இப்போது அரசாங்கத்திற்கே ஒரு முரண்பாடாக மாறிவிட்டது . அவற்றை மறைக்க அரசாங்கம் புதிய நாடகங்களை காட்டுகின்றது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் மீதமுள்ள 22 பகுதிகளை உடனடியாக வெளியிடுமாறு சம்பிக்க ரணவக்க அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சமீபத்தில் கத்தோலிக்க பாதிரிமார்களுடன் சேர்ந்து சதி செய்வதாக சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியும் அதே போல்தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.






