ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் போராட்டம்

கொழும்பில், ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை மதியம் 12 மணியளவில் அனைத்து முக்கிய மருத்துவமனைகளின் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என சுகாதார தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்களின் போக்குவரத்து சிக்கல்களை நிவர்த்தி செய்தல், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் கொவிட் இடர்கால கொடுப்பனவை வழங்குதல், தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரி செய்வதற்கான இழப்பீடு, அக்ரகார கொடுப்பனவு வழங்குதல் மற்றும் 180 நாட்கள் முளுமைப்படுத்திய மாற்று
ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனை முன்பாக போராட்டம் தொடங்கும் எனவும், அனைத்து மருத்துவமனைகளின் முன்பும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் கூறினார்.

இப் போராட்டத்திற்குப் பின்பும் அரசு தமது கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை எனின், தொழிற்சங்க நடவடிக்கை வழிமுறையில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply