இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள உலக வங்கி

கொழும்பு, ஏப் 26

உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்து, எரிவாயு, விவசாயம், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுக்காக குறித்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply