அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம்! – மஹிந்தவின் பதவியும் பறிக்கப்படுகின்றது?

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளார்.

கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Leave a Reply