உழவர் இன்றி தேசமில்லை! விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மூதூர் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று புதன்கிழமை (27) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அலுவகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் விவசாயிகளுக்கான உரத்தை வழங்கு, விவசாயிகளின் கருத்துக்களை உள்வாங்கு, உழவர் இன்றி தேசமில்லை, உணவுத் தட்டுப்பாட்டுக்கு உடனடித்தீர்வு வழங்கு உள்ளிட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply