கட்டட நிர்மாணப்பணிகள் 3 மாதங்களுக்கு நிறுத்தம்!

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து கட்டட நிர்மாணப்பணிகளையும் இடைநிறுத்துமாறு  மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று  இலங்கை தேசிய கட்டுமானச் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

கட்டட நிர்மாணத்துக்கான மூலப் பொருள்கள் விற்பனை செய்யப்படாத நிலை ஏற்படும் போது, இறக்குமதியாளர்கள் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply