இ.தொ.கா வுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

கொழும்பு,ஏப் 27

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் அறியப்படுத்தியுள்ளார்.

தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இதற்கமைய, முதல் கட்டமாக எதிர்வரும் 29ஆம் திகதி, முற்பகல் வேளையில், ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு, பொறுப்பு வழங்கப்படும் நபர்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கால எல்லை என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு கிடைத்துள்ள போதும், அதற்கு செல்வது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

Leave a Reply