நள்ளிரவை தாண்டியும் தொடரும் அரசிற்கு எதிரான மதத்தலைவர்களின் ஆர்ப்பாட்டம்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியும் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இருபதாவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகின்றது.

இதேவேளை அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மாத்தறை கோட்டா கோ கம கிளையில் மதத்தலைவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று நள்ளிரவை கடந்த நிலையிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply