தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் – விமான நிலையம், கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாக தகவல்!

<!–

தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் – விமான நிலையம், கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாக தகவல்! – Athavan News

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே இன்று(வியாழக்கிழமை) கடமைக்காக வருகை தந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஏற்கனவே சுமார் 5 சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றின் கொள்கலன்களை இறக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply