<!–
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.
கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஊடாக 30 மில்லியன் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






