கே.கே.எஸ் வீதியில் அதிவேகமாக பயணித்த வாகனம் விபத்து

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் அதிவேகமாக பயணித்த ஹையஸ் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் காங்கேசன்துறை வீதியில் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வேகமாகப் பயணித்த குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மதகு ஒன்றின் தூணில் மோதியதாக தெரியவந்துள்ளது.

அதிஸ்டவசமாக எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply