ஜேஸன் ஹோல்டரின் அதிரடி வீண் – ஹைதராபாத்தை 5 ஓட்டங்களினால் வீழ்த்தியது பஞ்சாப்!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுகொண்டது.

இந்நிலையில் 126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக ஜேஸன் ஹோல்டர் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ரவி பிஸ்னொய் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Leave a Reply