திருகோணமலையில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு.

திருகோணமலையின் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவின் இடிமன் பகுதியில்  அதிகமான டெங்கு நோயாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அலுவலக சுகாதார பணியாளர்கள்  வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அதிகமான இடங்களில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். எச்.எம்.றிஸ்வி தெரிவித்துள்ளார்.

எனவே பொது மக்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.

1.இரண்டு நாட்களுக்கு மேல் குடம், வாளி மற்றும் நீல நிற பரல்களில் நீரை சேமித்து வைக்க வேண்டாம்,ஒவ்வொரு முறையும் நீர் சேமிக்கும் கொள்கலன்களை பூரணமாக கழுவி சுத்தம் செய்த பின்னரே மீண்டும் நீரை சேகரித்தல் வேண்டும்.

2.ஒவ்வொரு நாளும் உங்கள் கிணறு, நீர் சேமிக்கும் கொள்கலன்கள், மலசலகூட வாளி, சுற்றுப் புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அவதானியுங்கள்.

3.இவ்வாறான குடம்பிகள் காணப்படும் இடங்களை அடையாளம் கண்டு உடனடியாக சுத்தம் செய்து கொடிய டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். தொடர்ச்சியாக புகை விசுரும் நடவடிக்கையும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply