இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் – காத்திருக்க வேண்டாம் – அரசாங்கம்!

நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் என்றும் எனவே மக்கள் வரிசையில் நிற்கவேண்டாமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என தெரிவித்தார்.

அவ்வாறு ஒருபோதும் வழங்கப்படவில்லை என்றும் இனிமேலும் வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

இதேநேரம், நேற்று இரவு பெற்றோல்களை ஏற்றிய கப்பலொன்று நாட்டிற்கு வந்ததாகவும், அதிலிருந்து சரக்குகளை இறக்க வேண்டும் என்பதால் உடனடியாக பெற்றோலை விநியோகிக்க முடியாது என தெரிவித்தார்.

எனவே, நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் என்றும் எனவே மக்கள் வரிசையில் நிற்கவேண்டாமெனவும் அவர் கேட்டுக்ககொண்டார்.

Leave a Reply