மருந்துகளுக்கான தட்டுப்பாடு மரணங்களையும் உண்டாக்கும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

கொழும்பு,மே 23

நாட்டில் நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தீவிர இதய நோய்க்கான மருந்துகள், புற்றுநோயாளிகளுக்கான மருந்துகள், நீரிழிவு நோய்க்கான தடுப்பூசிகளான இன்சுலின் போன்றவையே இவ்வாறு அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது.

இந்த 25 மருந்துகளுக்கும் தனியார்துறை மருந்தகங்களிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply