வட் வரி, சுங்க மிகை கட்டணங்களை அறவிட நிதி அமைச்சு அறிவுறுத்து

பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கான இறக்குமதி தீர்வை, 12% வற் வரி மற்றும் சுங்க மிகை கட்டணங்களை அறவிட நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு, இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று முதல் குறித்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply